பாசறை என்பது அரசனும் படைகளும்
போர்செய்வதற்காகச் சென்று தங்குவது என்பது யாவரும் அறிந்ததே. அது பாசு + அறை என்னும் இரு சொற்களின் கூட்டாகும்.
பாசு என்பதற்குப் பசுமை எனத் திவாகர நிகண்டும்,
மூங்கில் எனச் சூடாமணி நிகண்டும் பொருள்
தருகின்றன. அதாவது பசுமை என்பது மூங்கிலுக்கு
ஆகுபெயராக வழங்கி இருக்கின்றது. மூங்கிலால் தடுத்துக் கட்டப்பட்ட அறை தான் பாசறை. இதற்கு
நிகரான கட்டூர் என்பதும் இங்கு ஒப்புநோக்கத்
தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக