தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
மொழி – மனித சமூகத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு. ஆதி மனிதர்களிடம் உழைப்புத்
தோன்றிய பொழுதே மொழியும் உடன்தோன்றியதெனக் கூறப்படுகிறது. உலகில் மனித இனம் நிலைபெற்றிருக்கப்
பொருள் உற்பத்தி எந்த அளவிற்கு அடிப்படிடையோ அதே அளவிற்கு மொழியும் இன்றியமையாதது.
இது மானுடத்திற்கான காற்றாகவும் களஞ்சியமாகவும் விளங்குகின்றது. பாமரர்கள் நாவிலும்
பண்டிதர்கள் பாவிலும் அளவிலா ஆனந்தக் கூத்தாடும் மொழியை இறுகப் பிடித்து இனம்பிரித்து
ஆராய்வது இயலாத ஒன்றுதான். இருந்தும் பொழுதுபோக்க, புலன்மகிழ என்னதான் செய்வது? வலைப்பூவில்
வழிதேட வந்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக