வானரம் என்றால் குரங்கு என்பது
பலருக்கும் தெரியும். ஆனால் அஃது ஒரு தொகைச்சொல் என்பது தெரியுமா? வால் + நரம் = வானரம்.
அதாவது வாலை உடைய மனிதன் என்பது பொருள்.
மனிதனுக்கும் குரங்கிற்குமான இனவியல் தொடர்பு பற்றி டார்வின் மாதிரி நம்மவர்கள் முழுமையான
ஆய்வு செய்தார்களா என்று தெரியாது. ஆனால் புறத்தோற்றத்தை
வைத்துப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு சொல்லாக்கத்தைச் செய்திருக்கிறார்கள்.
தொல்காப்பிய மரபியல் நூற்பா ஒன்றுக்கு உரையெழுதிய பேராசிரியர், மனவுணர்வு மிக்க குரங்கு
போன்றனவும் ஆறறிவு உயிர்களில் சேர்க்கத் தகுந்தவை எனக் குறிப்பிடுகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக