தமிழ் நாட்டின் பல பகுதிகளில்
மாத்தூர் என்னும் பெயரில் ஊர்கள் காணப்படுகின்றன. இது மாற்று + ஊர் = மாற்றூர் என்பதன்
மரூஉ. அதாவது வெள்ளம், தீ போன்ற இயற்கைக் காரணங்களுக்காகவும் வேறு பல செயற்கைக் காரணமாகவும்
ஓர் ஊர் மாற்றோர் இடத்திற்கு மாற்றப்படுவது உண்டு. இம்மாற்றம் சில / பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு.
பல இடங்களில் அருகருகே புதுமாத்தூர், பழைய மாத்தூர் என வழங்கப்படும் மரபும் காணப்படுகின்றது.
இவை இடப்பெயர்வு குறித்த ஆய்விற்கான களமாகும். எப்படியாயினும், மாற்றூர் ~ மாத்தூர்
ஆவது மொழி இயல்பு. நாற்றம் ~ நாத்தம்;குற்றம் ~ குத்தம் என்னும் மாற்றங்களை ஒப்பு நோக்குக.
இவ்வகை மாற்றத்தை மொழியியலில் பல்லினமாதல் (Dentalization) என்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக